சீன உளவு கப்பலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - மத்திய இணை மந்திரி முரளிதரன்

கச்சத்தீவை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் கூறியுள்ளார்.
சீன உளவு கப்பலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - மத்திய இணை மந்திரி முரளிதரன்
Published on

செம்பட்டு,

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரன் சென்னையிலிருந்து இன்று திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது,

கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரேத்தேர்தல் பற்றி நாடு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என திமுக மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சி சொன்னாலும் அவரது வரலாற்றை படித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திமுகவின் ஊழல்கள் மற்றும் குடும்ப ஆட்சியை பாஜக எதிர்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பாஜகவிற்க்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com