இனி நமக்குள் பிரிவில்லை; இரும்பு கோட்டையை எவராலும் அசைக்க முடியாது - அ.தி.மு.க. ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு

கோட்டையில் மீண்டும் இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே நமது இலக்கு என அ.தி.மு.க. கூறியுள்ளது.
இனி நமக்குள் பிரிவில்லை; இரும்பு  கோட்டையை எவராலும் அசைக்க முடியாது - அ.தி.மு.க. ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு
Published on

சென்னை,

அ.தி.மு.க.வில் இரு அணிகளும் ஒன்றிணைந்தது குறித்து அக்கட்சியின் ஐ.டி.விங்கின் சமூகவலைத்தள 'எக்ஸ்' தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்’ - அம்மா(ஜெயலலிதா)

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எக்கு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது.

இனி நமக்குள் பிரிவில்லை... இந்த இரும்பு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..

நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே. தமிழ்நாடும் நமதே.”

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com