நான் முதல்வன் திட்டம் மூலம் மிளிரும் இளந்தலைவர்களை வளர்த்தெடுத்து வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


நான் முதல்வன் திட்டம் மூலம் மிளிரும் இளந்தலைவர்களை வளர்த்தெடுத்து வருகிறோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம் 

நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை வளர்த்தெடுத்து வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

"நான் முதல்வன்" திட்டத்தின் வெற்றி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும் ஒரு பெருமைமிகு பெற்றோராகவும் நமது இளைஞர்களின் அறிவுத்திறம் அங்கீகாரம் பெறுவது கண்டு எனது நெஞ்சம் பெருமித உணர்வால் நிறைகிறது. என் நெஞ்சுக்கு நெருக்கமான "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நாம் வளர்த்தெடுத்து வருகிறோம்.

நமது இளைஞர்கள் நிமிர்ந்து நின்று, "உலகை வெற்றிகொள்ளவும் முன்னடத்திச் செல்லவும் தயார்" என்று பறைசாற்றுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story