ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல எனவும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
ஆரியத்துக்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:-

பாராட்டுகளைபோல விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன். விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன்தான் அதிகம் இருக்கும். எனவே அதை விரும்புகிறேன். திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. கொள்கை என்றால் கிலோ எவ்வளவு என கேட்பது அதிமுக. பாஜகவும், அதிமுகவும் நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள். மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என்பதால் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். போலியான பெருமைகள் தேவையில்லை. உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். ஆரியத்திற்குதான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல.

தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம். என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள். நெகட்டிவ் பிரசாரம் மூலம் பிறரை வீழ்த்தக் கூடாது. பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். என் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அதை தடுக்க நான் விரும்பவில்லை. திமுக ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டதாக தகவல்கள் பரவுகின்றன. வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளம் மூலம் வதந்தி பரவுகிறது. 1,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோவில் சொத்துகளையும் மீட்டெடுத்துள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com