கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்: மு.க.ஸ்டாலின்

வெல்வோம் 200; படைப்போம் வரலாறு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்: மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் 23-ந் தேதி நடக்கிறது. 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பா ளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரை தொடங்க ஆயத்தமானேன்… ஓசூரில் தொடங்கி, சென்னை எண்ணூரில் இரவு 10 மணிக்கு பிரச்சாரத்தை நேற்று முடித்தேன்.

ஓசூர் முடித்து மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலைகளில் மக்கள் வரவேற்பளிக்க சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வீதி வீதியாக வாக்கு கேட்டுவிட்டு, இரவு திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் வாக்குச் சேகரித்து மீனவச் சொந்தம் ஒருவரது வீட்டில் மீன் சாப்பிட்டதும்தான், நேற்றைய நாள் நிறைவுற்றது.

இப்போது, சூரியன் உதித்ததும் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டேன். கருத்துக்கணிப்புகள் மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com