

மதுரை,
மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
ஆணவ கொலைகள் அதிகரிப்பதற்கு வலதுசாரி அரசியல்தான் முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. மறுக்கவும் முடியாது. வலதுசாரி அரசியல் என்பது பழமைவாதத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல். மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என பிரிப்பது இறைவனின் முடிவு என மக்களை நம்ப வைக்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் வலது சாரிகள் வளர்ந்து வருகின்றனர். வலுப்பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்த ஆணவ கொலைகளே சான்றுகளாக உள்ளன. சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடக்கூடது என்பவர்கள் வலதுசாரிகள். அவர்கள் அம்பேத்கரை தலைவர் இல்லை எனச் சொல்கின்றனர். எனவே, அத்தகைய வலதுசாரி சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
சாதியிலிருந்து மீளமுடியாமல் அதில் வசமாக சிக்கிக்கொண்டிருக்கிறோம். சாதி அடையாளத்தோடு வாழும் வகையில் நமது வாழ்வு நிறுவப்பட்டுள்ளது. அதற்கு மனு தர்ம கொள்கைளையும், சனாதனத்தையும் வீழ்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்