‘பயந்து ஒதுங்கும் அரசியல் எங்களிடம் கிடையாது’ - ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பதிவு

ஜெயலலிதாவுக்கு தமிழகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது என பூங்குன்றன் கூறியுள்ளார்.
‘பயந்து ஒதுங்கும் அரசியல் எங்களிடம் கிடையாது’ - ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில் தொர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“பயந்து ஒதுங்கும் அரசியல் எங்களிடம் கிடையாது. பணிந்து போகும் குணம் ரத்தத்தில் கிடையாது! எதிரிகளின் சதிவலை கண்டு - ஒருபோதும் பரிதவித்து நின்றதில்லை இந்த சிங்கம்!

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை. "மக்களைக் காப்பதே என் தர்மம்" - என்ற மகா சக்தி கொண்ட வைரம் இவர்!

​நிழல் தேடி ஓடாமல், சுட்டெரிக்கும் சூரியனுக்கும் குடை பிடிக்கும் அம்மா எனும் அந்த ஆளுமைக்கு - தமிழகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது!”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com