தமிழக அரசியலுக்கு எந்த நடிகர்கள் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஆதவ் அர்ஜுனா

யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் வரட்டும். திமுக நமக்கு போர் அடித்து விட்டது என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா
Published on: 

சென்னை,

புதிய புதிய நடிகர்கள் டெல்லியில் போய் உட் கார்ந்திருக்கிறார்கள். யார் வந்தாலும் அதைப் பற்றி கவலையில்லை என அமைச்சர் ஆதவ் அர் ஜுனா கூறினார்.

சென்னையில் நடந்த விழாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர் ஜுனா பேசியதாவது: வெற்றி தமிழகத்திலிருந்து உருவாக்கப்படும். 15 வருஷம் என்ன நடந்தது என்பதை விட்டு விடுங்கள்.இந்தியாவின் வெற்றி தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்படும். இதை உடைக்கிறதுக்குத்தான் புதிய புதிய நடிகர்கள் டெல்லியில் போய் உட்கார்ந்துள்ளனர். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. அதையெல்லாம் பார்த்து விட்டோம். எதை வேண்டுமானாலும் செய்யட்டும்.

யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் வரட்டும். திமுக நமக்கு போர் அடித்து விட்டது. திமுக சைத்தா னின் பிள்ளைகளாக மாறி விட்டார்கள். அடுத்துப் புதிது புதிதாகச்சைத்தானின் பிள்ளைகள் வரட்டும். மதச் சார்பற்ற கூட்டணி என வந்தால் கம்யூனிஸ்டுகள் நமது பக்கம்தான்இருப்பார் பார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நாம் எதிர்க்க வேண்டியது கம்யூனிஸ்டுகளை அல்ல.மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர்கள் தான் நமக்கு எதிரிகள்.

கம்யூனிஸ்ட் தோழர்களும் இதில் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அரசியலில் தவறுகள் நடக்கும்போது, அதைச்சரி செய்யும் இடத்தில் முதலமைச்சரும், நாங்களும் இருக்கிறோம். அமைச்சர் என்கிற முறையில் அதிகாரத்தை மனதில் வைத்து கைது செய்வோம் என்ற எண்ணம் எங்களுக்குக் கிடையாது.

முதல்-அமைச்சர் இன்றும் ஒரு சாமானிய வீட்டுப் பிள்ளையாகத்தான் இருக்கிறார். எனவே, 2029ன் வெற்றி மற்றும் வரக்கூடிய உள்ளாட் சித் தேர்தலின் வெற்றி, ஓட் டுமொத்த மதச்சார்பின்மை யில் இருந்து வரக்கூடிய தலைவர்களால்தான் சாத்தியமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com