'நாங்கள் காந்தி வழியை இல்லை, நேதாஜியின் வழியை பின்பற்றுகிறோம்' - நடிகை ரஞ்சனா நாச்சியார் விளக்கம்

கண்டிப்புடன் இருந்தால்தான் தவறு செய்ய பயப்படுவார்கள் என்று நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.
'நாங்கள் காந்தி வழியை இல்லை, நேதாஜியின் வழியை பின்பற்றுகிறோம்' - நடிகை ரஞ்சனா நாச்சியார் விளக்கம்
Published on

சென்னை,

குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை அடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நடிகை ரஞ்சனா நாச்சியார், இந்த சம்பவம் தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிச் செல்வதை பார்த்தால் அனைவருக்கும் கோபம் வரும். ஆனால் எல்லோரும் எதுவும் கேட்காமல் ஒதுங்கி செல்வார்கள். அவ்வாறு இல்லாமல் இதை அனைவரும் கேட்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நான் காந்தியின் வழியை பின்பற்றும் நபர் கிடையாது. எங்கள் குடும்பத்தினர் அனைவருமே நேதாஜியின் வழியை பின்பற்றுபவர்கள். மாணவர்களை அடித்தது சரி என்றும், அனைவரையும் அடிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்புடன் இருந்தால்தான் தவறு செய்ய பயப்படுவார்கள்."

இவ்வாறு நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com