‘எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க தேவையில்லை’ - செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி எல்லோருக்கும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
‘எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க தேவையில்லை’ - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பூஸ்ட் கொடுக்கிறார். அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “எங்கள் தொண்டர்கள் எல்லோரும் நல்ல உத்வேகத்துடன் தான் இருக்கிறார்கள். எங்களுக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க தேவையில்லை. ஏற்கனவே ராகுல் காந்தி எங்கள் எல்லோருக்கும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் எங்களுக்கு பூஸ்ட் கொடுப்பதாக சொன்னதற்கு நன்றி” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com