பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம் - குஷ்பு

பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை,

சென்னை, புதுப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு கூறியதாவது: - "முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கென சில நடைமுறைகள் இருக்கின்றன. முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பது மரபு. அதனால் தான் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என சொல்லியிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டுதான் இங்கு நிற்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் எந்த குழப்பமும் வேண்டாம். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி குறித்து இறுதி முடிவு குறித்து 4-5 நாட்களில் எடுக்கப்படும். கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com