

சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ள திராவிட மாடல்.
* பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17)
* பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள்
* மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர்
* பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி
* குடிநீர்த் திட்டப் பயன்பாடுகள் – ரூ. 5,447 கோடி
* சாலைகள் மேம்பாடு – 3,455 கிலோமீட்டர்
* வடசென்னை வளர்ச்சித் திட்டம் - சுமார் 7,000 கோடி ரூபாய்
இவை தவிர, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மாளிகைகள், புத்தம்புதிய வடிவமைப்பிலான பேருந்து நிலையங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது.
இன்னும் செய்வோம், உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-ல் வளர்த்தெடுப்போம். சிங்கார சென்னை 2.0 லோடிங் இன் திராவிட மாடல் 2.0! #வெல்வோம்_ஒன்றாக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.