

ராமநாதபுரம்,
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மரியாதை செலுத்தினார். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்ற தினகரன், மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், கொரோனா காரணமாக இந்த ஆறு மாத காலமாக அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து தனது கட்சியின் நிர்வாகிகளிடம், கொரோனாவால் நமக்கும், பிறருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் கூட்டங்கள் சேர்க்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.