'ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

குறித்த காலத்தில் பணிகளை முடித்திட அறிவுறுத்தல் வழங்கியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 10 அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து 4 மணி நேரம் தொடர் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன.

நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன். அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! "அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்!"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com