தமிழக அரசியல் சூழ்நிலைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கும், எங்களுக்கும் எந்த பங்கும் இல்லை என்று எல். முருகன் கூறினார்.
தமிழக அரசியல் சூழ்நிலைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: மத்திய மந்திரி எல்.முருகன்
Published on

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- “தமிழ்நாட்டில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து எங்கள் கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

இப்போது தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்சினையில் தேவையில்லாமல் எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை. நாங்கள் இதில் தலையிடவே இல்லை” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com