நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை - சீமான் பரபரப்பு அறிக்கை

சாட்டை யூடியூப் சேனலில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை - சீமான் பரபரப்பு அறிக்கை
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனுக்கு எதிராக இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அந்த அறிக்கையில், "திருச்சி துரை முருகன் நடத்தும் "சாட்டை" வலையொளிக்கும் (YouTube channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com