"போர் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்.." - கி.வீரமணி


போர் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்.. - கி.வீரமணி
x

கோப்புப்படம்

போர் இல்லாத புதிய உலகத்தை காண அமைதி, ஆக்கம், மனிதம் கொண்ட ஒரு பொது அணி உருவாக வேண்டும் என்று கி.வீரமணி தெரிவித்தார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்குப் பயன்பட்டு, மனித குல வளர்ச்சியை மேலும் மேன்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பல நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குலத்தின் அழிவியலை நோக்கிப் பயணிக்கிறது.

ஆதிக்க வெறிக்கும், மதவெறிக்கும் பழிவாங்கும் போக்கிற்கும் மனித உயிர்கள் பலியாவது கேவலமான சமூக கொடுமை. நாகரிக அறிவியல் உலகத்தில் இது ஏற்கக் கூடியதா?.

இஸ்ரேலின் இதயமற்ற போர், காசா பகுதியைத் தொடர்ந்து குறி வைத்து திட்டமிட்டு மதவெறி அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை என்ற உலக நாடுகள் சங்கம் அமெரிக்காவின் கைப்பாவையாக இருப்பது வெட்கக்கேடானது. எனவே, போர் இல்லாத புதிய உலகத்தை காண அமைதி, ஆக்கம், மனிதம் கொண்ட ஒரு பொது அணி உருவாக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

1 More update

Next Story