தமிழக மக்களின் தன்மானமிக்க வெற்றிதான் எங்களுக்கு தேவை - சு.வெங்கடேசன்

மத்திய அரசு எங்களின் அரசியல் உரிமையைப் பறிக்கத் துடிக்கிறீர்கள் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
தமிழக மக்களின் தன்மானமிக்க வெற்றிதான் எங்களுக்கு தேவை - சு.வெங்கடேசன்
Published on

சென்னை,

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-இத்தனை நாட்களாக எங்கள் வாழ்க்கைக்கான நிதியைப் பறித்தீர்கள் ! இப்போது எங்களின் அரசியல் உரிமையைப் பறிக்கத் துடிக்கிறீர்கள் ! அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மீதான இந்த முக்கிய விவாதத்தில் தமிழ் நாட்டின் 40 எம்.பிக்கள் இங்கே இருக்கிறோம்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை மந்திரி எல். முருகன் அவிநாசியிலே பிரசாரத்தில் இருக்கிறார். உங்களுக்குத் தேவை ஓட்டு, எங்களுக்குத் தேவை தமிழக மக்களின் தன்மானமிக்க வெற்றி.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com