“தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்” அர்ஜூன் சம்பத் பேட்டி

“தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்” அர்ஜூன் சம்பத் பேட்டி.
“தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்” அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்வேறு வளர்ச்சிக்காக தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது மின் உற்பத்தி எந்திரம் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

அறநிலையத்துறை கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும். உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்க மத்திய அரசால் மட்டுமே முடியும். தமிழக அரசு டெல்லியில் இருந்து மட்டுமே அழைத்து வர முடியும். தமிழக கவர்னரை எதிர்ப்பது நல்லது அல்ல. மத்திய அரசுடன், மாநில அரசும் சுமுக உறவு வைத்து இருக்க வேண்டும். இந்து ஒற்றுமை மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com