வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - கமல்ஹாசன்

வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வேலியே பயிரை மேயும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - கமல்ஹாசன்
Published on

சென்னை,

கோவையில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

"பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்." என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com