பெரியார் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம் - அண்ணாமலை

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டர் பெரியார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரியார் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம் - அண்ணாமலை
Published on

சென்னை,

பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“செப்டம்பர் 2026: சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com