சாவர்க்கரின் புண்ணிய திதியில் அஞ்சலியை செலுத்துகிறோம் - கவர்னர் ஆர்.என்.ரவி

சாவர்க்கரின் புண்ணிய திதியில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சாவர்க்கரின் புண்ணிய திதியில் அஞ்சலியை செலுத்துகிறோம் - கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர், அசாத்திய தேசபக்தர் என்றும் அச்சமற்ற புரட்சியாளர் என்றும் சமூக நீதிக்கான வீரர் என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் செலுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பதிவில்,

சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் புண்ணிய திதியில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம். அசாத்திய தேசபக்தர், அச்சமற்ற புரட்சியாளர் மற்றும் ஆழ்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அவர், மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை மற்றும் ரத்னகிரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லொணா கொடுமைகள் மற்றும் சித்ரவதைகளை அனுபவித்தார். ஒரு சிறந்த தேசியவாதியாக, பிரிட்டிஷ் ஆளுகை எதிர்ப்புணர்வுத் தீயை மூட்டி எண்ணற்ற சுதந்திரப் போராளிகளை ஊக்கப்படுத்தினார்.

சமூக நீதியின் சிறந்த வீரராக அவர் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிராக அயராது போராடி, ஏராளமான சமூக சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக விளங்கினார். போற்றுதலுக்குரிய பாரம்பரியத்தில் ஊறிப்போன நம்பிக்கை, பெருமை மற்றும் முற்போக்கான பாரதத்தை ஊக்குவிக்கும் வகையில் அவரது நீடித்த மரபு வழிகாட்டும் சக்தியாக தொடர்ந்து நீடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com