பா.ஜ.க.விடமிருந்து ஒற்றுமை, வளர்ச்சி அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன்

மக்கள் நலனுக்காக மட்டுமே பாஜக செயல்படுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மராட்டிய மாநிலத்தில் வேட்டி கட்டும் தமிழர்களைக் குறித்துக் கொச்சையாகப் பேசி பிரிவினைவாதத்தைத் தூண்டி, இண்டி கூட்டணி குளிர் காய முயற்சித்த வேளையில், ஒற்றுமையைப் பறைசாற்றி மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று உள்ளாட்சித் தேர்தலில் வாகை சூடியது நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி!
இந்நிலையில், தேர்தல் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பாஜக மராட்டிய மாநிலத் தலைவர் சகோதரர் ரவி தாதா வேட்டி அணிந்து பங்குபெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு, தமிழர்கள்-மராட்டியர்கள் இடையிலான ஒற்றுமையை மேலும் பறைசாற்றுகிறது.
மொத்தத்தில், "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பதை என்றும் கொள்கையாகக் கொண்டு மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படும் பாஜக -விடமிருந்து ஒற்றுமை மற்றும் வளர்ச்சி அரசியலை 'இந்தியா' கூட்டணி இனியாவது கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.






