சென்னையில் அண்ணாமலை தலைமையில் ’வீ த லீடர்ஸ்’ மாநில மாநாடு

அண்ணாமலை ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
சென்னையில் அண்ணாமலை தலைமையில் ’வீ த லீடர்ஸ்’ மாநில மாநாடு
Published on

சென்னை,

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அவர், பாஜகவில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இயக்கத்தில் உள்ளவர்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளை அவர் தொடங்கி உள்ளார்.

சென்னையில் மாநாடு

தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது தொடர்பான கருத்துக்களை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் வெளிப்படுத்தி வருகிறது. மேலும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முழக்கத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் ஒருங்கிணைத்து வருகிறது.

இதையடுத்து, அண்ணாமலை தலைமையில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கடந்த 12ம் தேதி கோவையில் நடைபெற்றது.

இந்நிலையில், வீ த லீடர்ஸ் இயக்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் அடுத்த மாதம் இம்மாநாட்டை நடத்த வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2வது மாநில மாநாட்டிற்கான இடம், தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com