மதுரையில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை மீட்டெடுத்த ‘வீ தி லீடர்ஸ்’ தன்னார்வலர்கள்

சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
துப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வாலர்கள் மீட்டெடுத்தனர்.
வீ தி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வாலர்கள்
Published on

மதுரை,

மதுரையில் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிய மயானத்தை ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தன்னார்வாலர்கள் மீட்டெடுத்தனர்.

மதுப்பிரியர்கள் கூடாரம்

மதுரை மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் அமைந்துள்ள பொது மயான வளாகம், கடந்த சில மாதங்களாகப் பராமரிப்பின்றி புதர்கள் மண்டி வந்தன. இதனால், சமூக விரோதிகள் மற்றும் மதுப்பிரியர்களின் கூடாரமாக அப்பகுதி மாறி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருந்தது.

சுற்றுச்சூழல் மாத விழிப்புணர்வுப் பணி

இந்நிலையில், சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை ‘வீ தி லீடர்ஸ்’அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாப்பாக்குடி மயானத்தை முற்றிலும் தூய்மைப்படுத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டனர்.

அகற்றப்பட்ட டன் கணக்கிலான குப்பைகள்

இதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கு, கே.கே. பில்டர்ஸ் கண்ணன் தலைமை தாங்கி, முன்னிலை வகித்தார். இதில் திரளான அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மயான வளாகத்தில் பல வருடங்களாகக் கிடந்த நூற்றுக்கணக்கான மது பாட்டில்கள் நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகள், கழிவுகள், அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் ஆகியவை நவீன உபகரணங்கள் மற்றும் அவர்களால் முழுமையாக அகற்றப்பட்டு, வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் பாராட்டு

மயானங்கள் போன்ற பொது இடங்கள் சுகாதாரமற்றுப் போவதைத் தடுத்து, அவற்றை அமைதியான சூழலாக மாற்றும் நோக்கில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு மேற்கொண்டு வரும் இந்த தூய்மைப் பணி, மதுரை பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com