அ.தி.மு.க. எடுத்த முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை- உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அ.தி.மு.க. தலைமை எடுத்த சில முடிவுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
உடுமலை ராதாகிருஷ்ணன்
Published on

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

“அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டர்களாக இருந்து, புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், இன்று த.வெ.க. தலைவர் விஜய்யின் தலைமையை ஏற்று அக்கட்சியில் இணைந்துள்ளோம்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவையும் பார்த்தது போலவே விஜய்யையும் பார்க்கிறோம். அரசியல் ரீதியாக திசை தெரியாமல் இருந்த நாங்கள், தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளோம்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அ.தி.மு.க. தலைமை எடுத்த சில முடிவுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த முடிவுகள் என்ன என்பது குறித்து வெளியில் பேச நாங்கள் விரும்பவில்லை.ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகத்தை, தற்போது தமிழக அரசு சீரமைத்து மீண்டும் சிறப்பாக செயல்படச் செய்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவதற்காக நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்” என்றார்.

கடம்பூர் ராஜு பேசுகையில், "2011 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஜய் நற்பணி மன்றம். அப்போது இருந்த ஆதரவு இன்றும் தொடர்கிறது . தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தவெகவில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com