டாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்

மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
டாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்
Published on

தர்மபுரி,

பொதுவாக, மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கைகளும், போராட்டங்களும் நடைபெறுவது வழக்கம். ஆனால், இதற்கு மாறாக மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தர்மபுரியில் உள்ள நலப்பரம் பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திப்பட்டி ஆகிய 7 கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

தங்கள் பகுதியில் இருந்து 20 கி.மீ சென்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டி உள்ளதாக மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com