‘தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும்’ - வி.சி.க. தீர்மானம்

திருமாவளவன் தலைமையில் வி.சி.க. உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
‘தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும்’ - வி.சி.க. தீர்மானம்
Published on

சென்னை,

தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என வி.சி.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் வி.சி.க.வுக்கான ஒரு இடத்தை கேட்டுப் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com