மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை விரட்டியாக வேண்டும்: அன்புமணி பிரசாரம்

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களின் இலக்கு என அன்புமணி ராமதாஸ் பேசினார்.
மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை விரட்டியாக வேண்டும்: அன்புமணி பிரசாரம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில் அ.ம.மு.க. வேட்பாளராக சைதாப்பேட்டையில் போட்டியிடும் செந்தமிழன், அ.தி.மு.க. சார்பில் தியாகராயநகரில் போட்டியிடும் சத்யா, விருகம்பாக்கத்தில் போட்டியிடும் விருகை ரவி ஆகியோரை ஆதரித்து சென்னை ஈக்காட்டுத் தாங்கல் கெங்கையம்மன் கோவில் அருகில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். இந்த கொடுங்கோல், மக்கள் விரோத, பெண்களுக்கு எதிரான, கஞ்சா தி.மு.க. ஆட்சியை விரட்டியாக வேண்டும். 5 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிய தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களின் இலக்கு.

5 ஆண்டுகாலம் தி.மு.க. வுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அதில் 66 வாக்குறு திகளைதான் நிறைவேற்றியுள்ளனர். அதாவது 13 சதவீதம் தான் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தி.மு.க. ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? வரவிடுவீர்களா?.

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது. தினம் தினம் பெண்களை சிதைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள். ஒரு பக்கம் கஞ்சா, மறுபக்கம் சாராயம். இதுதான் இவர்கள் நிர்வாகம். மக்கள் சிந்திக்க வேண்டும்.

மத்தியில் பா.ஜனதா ஆட்சி, மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி. இரண்டுமே சேர்ந்தால், தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்கும். அதனை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும். வளர்ச்சித் திட்டங் கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்கும். நல்ல முடிவை மக்கள் எடுக்கவேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com