உ.வே.சுவாமிநாதர் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்

தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவர் உ.வே.சுவாமிநாதர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உ.வே.சுவாமிநாதர் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்: டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்தவரும், தமிழ்ப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்டவருமான தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சங்கநூல்கள் தொடங்கி திருவிளையாடற் புராணம் வரை பல்வேறு ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து, நூலாக வெளியிட்டதோடு, தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த உ.வே.சுவாமிநாதர் அவர்களின் தமிழ்த் தொண்டை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com