'பா.ஜ.க.வை எப்போதும் எதிர்ப்போம்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

‘பா.ஜ.க.வை எப்போதும் எதிர்ப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'பா.ஜ.க.வை எப்போதும் எதிர்ப்போம்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Published on

சென்னை,

சென்னை துறைமுகத்தில் பெண் போலீசாரின் பாய்மர படகு பயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ' பீகாரில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.வின் பங்கெடுப்பு எவ்வாறு இருக்கும்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'இந்த கூட்டத்தில் தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் எப்போதும் பா.ஜ.க.வை எதிர்ப்போம். அந்த கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு (நிருபர்கள்) பேட்டி அளிப்பார்.' என்று பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com