‘த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்’ - விஜயபிரபாகரன்


‘த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம்’ - விஜயபிரபாகரன்
x
தினத்தந்தி 7 Sept 2025 3:54 PM IST (Updated: 7 Sept 2025 5:44 PM IST)
t-max-icont-min-icon

விஜயகாந்துக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது;-

“விஜயகாந்துக்கும், விஜய்க்கும் மிகப்பெரிய நட்பு உள்ளது. அதை தான் த.வெ.க. மாநாட்டில் விஜய் வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யை எங்களுக்கு பிடிக்கும், அவர் எங்களுக்கு எதிரி இல்லை. நாங்கள் மக்களுடன் தான் கூட்டணியில் உள்ளோம்.

த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து ஜனவரி 9-ந்தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிப்போம். சீமான் எதிர்க்கட்சியை பற்றி பேசி தான் பெரிய ஆளாகி உள்ளார். விஜயகாந்த் ரசிகர்களும், தொண்டர்களும் எப்போதும் கேப்டன் பின்னால் தான் நிற்பார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story