திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்போம்- காதர் மொய்தீன்


திமுக கூட்டணியில் 16 தொகுதிகளை கேட்போம்- காதர் மொய்தீன்
x

முஸ்லிம் வாக்காளர்கள் எல்லா மாவட்டங்களிலும் நீக்கப்பட்டுள்ளார்கள் என்று காதர் மொய்தீன் கூறினார்.

திருச்சி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் மாநில தலைவர் எம்.எஸ்.சல்மான் முகமது தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் முஸ்லிம் வாக்காளர்கள் எல்லா மாவட்டங்களிலும் நீக்கப்பட்டுள்ளார்கள்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களை நீக்கியது சரிதான். ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் ஆணையம் சரிசெய்யும் என நம்புகிறோம்.

தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்துவோம். அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்போம் என்றார்.

1 More update

Next Story