தி.மு.க. கூட்டணியில் போட்டியிட கூடுதல் தொகுதிகளை கேட்போம்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்தார்
பெரம்பலூர்,
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா பெரம்பலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறாமை, காழ்ப்புணர்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமியும், மற்றவர்களும் முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அதற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று கூறுவதை யாரும் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சி சட்டமன்ற தேர்தலில் பெருமளவுக்கு வெற்றி பெறாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






