உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்க உறுதியேற்போம் - விஜய்

உழைக்கும் கரங்களை போற்றுவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்க உறுதியேற்போம் - விஜய்
Published on

சென்னை,

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்க, உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம். உழைக்கும் கரங்களைப் போற்றுவோம்! உழைப்பாளர் தின வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com