

சென்னை,
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் வகையிலான ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கழகத் தலைவர் அண்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து போராடுவோம்!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.