மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: தமிழக முதல்வர் பழனிசாமி

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மும்மொழிக்கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: தமிழக முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை,

மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், "கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது" கடும் கண்டனத்துக்குரியது என்ற கூறி வருகின்றனர்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு முதல் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மும்மொழிக்கொள்கைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com