‘எங்க உங்க அப்பாவையே காணோம்’ ... அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!

டிஜிட்டல் பெயர் பலகையில் முதல் - அமைச்சர் விஜய், திமுகவினரை விமர்சிக்கும் வகையில் கூறப்பட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
பெயர் பலகையில் சர்ச்சை
Published on: 

கடலூர்,

’எங்க உங்க அப்பாவையே காணோம்’ என அரசு பேருந்து பெயர் பலகையில் திமுகவினரை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்ற வாசகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியிலிருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில் முதல் - அமைச்சர் விஜய் திமுகவினரை விமர்சிக்கும் வகையில் கூறப்பட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

‘எங்க உங்க அப்பாவையே காணோம்’ ‘ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி’, ‘கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்ட ஸ்டாலின் அங்கிள்’ என்பதுபோன்ற வாசகங்கள் பெயர் பலகையில் இடம்பெற்றிருந்தன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேருந்தை பின்தொடர்ந்து சென்ற வாகன ஓட்டிகள், அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com