மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் - பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.

கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற வாக்குத்திருட்டு கண்டிக்கத்தக்கது என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி.
Published on: 

திருச்சி,

மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் என பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்யவேண்டும்

இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்க ரவர்த்தி திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்கு திருட்டு விவகாரங்கள் வடமாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஏப்ரல் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவே, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

வாக்குத்திருட்டு

மராட்டியம், கர்நாடகா, அரியானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற வாக்குத்திருட்டு கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் யு.பி.ஐ. இலவசமாக இருப்பது அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் அழுத்தத்தின் காரணமாகவே மத்திய அரசு யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளது.

அணையை கட்ட விடமாட்டோம்

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்துக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com