கோவில்பட்டியில் பிளாஸ்டிக் லைட்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைய விடமாட்டோம்: துரை வைகோ பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தல் வெறும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான போட்டி கிடையாது; இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான போர் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் பிளாஸ்டிக் லைட்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைய விடமாட்டோம்: துரை வைகோ பேச்சு
Published on

தூத்துக்குடி,

கோவில்பட்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கா.கருணாநிதியை ஆதரித்து, வில்லிசேரி கிராமத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "கோவில்பட்டி பகுதியின் முதுகெலும்பாக விளங்கும் தீப்பெட்டித் தொழிலைப் பாதிக்கும் வகையில், பிளாஸ்டிக் லைட்டர் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் அமைய விடமாட்டோம். தொழிலாளர்களின் நலனே எங்களின் முக்கிய நோக்கம்" என உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தேர்தல் வெறும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையிலான போட்டி கிடையாது. இது ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான போர்; மதச்சார்பின்மைக்கும் மதவாதத்திற்கும் இடையிலான தேர்தல். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். பொருளாதார நெருக்கடியிலும் ஏழை மக்களுக்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்" எனப் பாராட்டினார்.

இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி, தே.மு.தி.க. சுரேஷ், வி.சி.க. முருகன், சி.பி.எம். நகர செயலாளர் சீனிவாசன், சி.பி.ஐ. பாலமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com