ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதி

கோப்புப்படம்
எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம் என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியோ இந்த தருணத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மதுரை ஆதீனம் சில மாதங்களுக்கு முன்பாக அவரை கொல்வதற்காக ஒருவர் காரை ஓட்டி வந்ததாக உள்நோக்கத்துடன் ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அவர் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கோர்ட்டு உத்தரவை மீறி உள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து யாரும் வரவில்லை என்பதால் ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றிப் பேசி கொண்டிருக்கிறார். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. அணி சேர்ந்திருக்கும் வரையிலும், அவர்களுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.






