நாங்கள் வெற்றியை அடையும்வரை ஓய மாட்டோம் - சீமான்

மீண்டும் மீண்டும் உதய சூரியன், இரட்டை இலைக்கு வாக்களித்தால் எந்த சாமியும் உங்களை மன்னிக்காது.
நாங்கள்  வெற்றியை அடையும்வரை ஓய மாட்டோம் - சீமான்
Published on

காரைக்குடி,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. காரைகுடியில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மீண்டும் மீண்டும் உதய சூரியன், இரட்டை இலைக்கு வாக்களித்தால் எந்த சாமியும் உங்களை மன்னிக்காது. நாங்கள் வெற்றியை அடையும்வரை ஓய மாட்டோம்; தொடர்ச்சியாக போராடுவோம்; உன்னிடம் இருந்து உங்களுக்காக வந்து இந்த சமூகத்தை மாற்றி அமைக்க வந்த புரட்சியாளன் தான் இந்த சீமான். எனவே விவசாயி சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com