நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் - மத்திய மந்திரி வி.கே.சிங்

2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் - மத்திய மந்திரி வி.கே.சிங்
Published on

குழித்துறை,

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூட்டம் மார்த்தாண்டம் குறும்பேற்றி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி வி.கே.சிங் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது நாடு படிப்படியாக அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

வரும் 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு தனி இடமும் மரியாதையும் உள்ளது. இந்தியா உலகின் முதன்மை நாடாக மாறும். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். அடுத்த தேர்தலுக்காக மேலும் நீங்கள் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com