"நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம்" - சரத்குமார் பேட்டி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று சரத்குமார் கூறினார்.
"நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம்" - சரத்குமார் பேட்டி
Published on

ஈரோடு,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது:-

"நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம். வட மாநிலத்தவர்கள் வருகையை காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வது நல்லது. ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில், நான் மட்டுமே நடிக்கவில்லை. விளம்பரத்தில் நடிப்பது சட்ட விரோத காரியமில்லை. என்னை மட்டுமே திலொ குறைகூறக் கூடாது. அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com