

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.