தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது: விஜய்க்கு திருமாவளவன் பதிலடி

விஜய்க்கு நெருக்கடி தர விரும்பவில்லை. பெரும்பான்மை கோரும் போது தவெகவை ஆதரிப்போம் என்று திருமாவளவன் கூறினார்.
தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது: விஜய்க்கு திருமாவளவன் பதிலடி
Published on

டெல்லி,

விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் முதலில் இசைக்கப்படும். அரசு விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாட மத்திய அரசு தெரிவித்து இருந்தாலும் தமிழக அரசு மறுத்துள்ளது. வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த கருத்தை கொண்டிருப்பதாக ஒரு சர்ச்சை இருக்கிறது. பாடல் விவகாரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவா , ஆளுநரின் விருப்பமா எனத்தெரியவில்லை.

இதற்குரிய விளக்கத்தை விஜய் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக, அதிமுக ஆதரவை நாடாமல் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் கோரினார். மதசார்பற்ற அரசை நிறுவுவது நோக்கம் என தவெக தரப்பில் சொல்லப்பட்டதால் ஆதரவு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது. விஜய்க்கு நெருக்கடி தர விரும்பவில்லை. பெரும்பான்மை கோரும் போது தவெகவை ஆதரிப்போம்” என்றார்

X

Daily Thanthi
www.dailythanthi.com