செல்வ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் நடந்தது.
செல்வ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம்
Published on

நொய்யல் அருகே மரவாபாளையம் நாடார்புரத்தில் புதிதாக விநாயகர் கோவில் கட்டப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்ததையடுத்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் ல்வவிநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com