வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடியில் 272 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீன்பாடு அதிகமாக இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்து வந்தனர். டீசல், மீனவர்கள் சம்பளம கொடுக்க முடியாமல் திணறி வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலில் 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக செப்டம்பர் 25 மற்றும் 26ம் தேதி ஆகிய 2 நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com