கிரானைட் கல் திருட முயன்றவர்களுக்கு வலைவீச்சு

கிரானைட் கல் திருட முயன்றவர்களுக்கு வலைவீச்சு
Published on

ராயக்கேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிம வள துணை தாசில்தார் கேகுல கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஏரி சின்னகம்பட்டி அருகே ரேந்து சென்றனர். அப்பகுதியில் அனுமதியின்றி 2 டிராக்டரில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கல்லை சிலர் வெட்டி எடுத்து திருட முயன்றனர். அதிகாரிகள் வருவதை பார்த்த அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து டிராக்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ராயக்கேட்டை பேலீசில் ஒப்படைத்தனர். மேலும் பேலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com