தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு.. முந்தைய நாளில் காதலியுடன் ஓட்டம் பிடித்த மணமகன்

திருமணத்தை நிறுத்திவிட்டு மணமகன் காதலியுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு.. முந்தைய நாளில் காதலியுடன் ஓட்டம் பிடித்த மணமகன்
Published on

அருமனை,

குமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒரு இளம்பெண்ணுக்கும் கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று முன்தினம் இவர்களுக்கு மேல்புறம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறுதாக இருந்தது. இதையடுத்து திருமணத்தின் முந்தைய நாளில் பெண் வீட்டார் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதனை தொடர்ந்து மணப்பெண் வீட்டார் மறுநாள் நடைபெற இருந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் இரவு மணமகனின் உறவினர்கள் செல்போன் மூலம் பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்தும்படி கூறினர். மேலும் மணமகன் தனது காதலியுடன் மாயமானதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெண்வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் திருமணமும் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மணமகள் வீட்டார் பலராமபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். அப்போது கேரள போலீசார், அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி பெண்வீட்டார் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com